பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலிய போலிஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன் கூறுகையில்,"பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை" என்றார்.
இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலிசாரால் சோதனை செய்ய முடியாததால் ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்ய முடியாது.
ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment