Wednesday 29 June 2011

ஸ்ரீபெரும்புதூரில் புதிய கார் தொழிற்சாலை

தற்போதைய செய்தி தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மதியம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் கார் நிறுவன நிர்வாகிகள் கிரிகோரி ஆலிவர், பிரெடரிக், ஜிதேஷ் கார்டியா, சஞ்யூவ் சகா, சாஸ்ஸிகந்த், வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கார் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அந்த நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய தொழிற்சாலை நிறுவ இடம் தேர்வு செய்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைய உள்ளது. இதற்கான நிலம் தேர்வு உள்பட முழு ஒத்துழைப்பை வழங்க முதல்-அமைச்சரை கார் நிறுவன பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிறுவனத்திற்கு தேவையான எல்லா உதவி களையும் செய்வதாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார். இந்த கார் தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஸ்.ஏ. கார் தொழிற்சாலை திட்டத்தின் மூலம் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான பிரான்சு கார் தொழிற்சாலைகளை ஈர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment