புது தில்லி,ஜூன் 28: மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலராக ஆர்.எஸ்.குஜ்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது அந்தப் பதவியில் இருக்கும் சுனில் மித்ரா வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து, ஜூலை 1-ம் தேதி அந்தப் பொறுப்பை குஜ்ரால் ஏற்றுக் கொள்கிறார். இதுபற்றி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1976-ம் ஆண்டு ஹரியாணா பிரிவில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற குஜ்ரால், இப்போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் செயலராகப் பணியாற்றி வருகிறார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநராகவும் குஜ்ரால் பணியாற்றியிருக்கிறார்.

No comments:
Post a Comment