Wednesday 29 June 2011

காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு

பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.


இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவை நெருங்கும் கப்பல்களை தடுப்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது.

இருப்பினும் கப்பல்படை நிவாரணக் கப்பல்களுடன் கடுமையாக மோதாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்வதேச நிவாரணக் கப்பல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் போது இஸ்ரேல் கடற்படையினருடன் பத்திரிக்கையாளர்களும் அனுப்பப்படுவார்கள்.

ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய வேண்டும் என பிரதமர் தெரிவித்து உள்ளார். இதன் படி 30 – 50 பத்திரிக்கையாளர்கள் சர்வதேச கப்பல்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு செல்கின்றனர்.

இஸ்ரேலிய ராணுவ பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"சர்வதேச நிவாரணக் கப்பல்களில் தீவிரவாத சக்திகள் இருப்பதாக எங்கள் ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த தீவிரவாத சக்திகள் இஸ்ரேலிய வீரர்களை கொல்லத் துடிக்கின்றனர்" என்றார்.

சர்வதேச கப்பல் ஒன்றில் இஸ்ரேலிய வீரர்களை தாக்குவதற்கு பயங்கர வெடி ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment