பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேச திரையரங்கம் ஒன்று கத்தாரின் தோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.
குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கிற்கான அனைத்து திரைப்படங்களும் கத்தாரின் சினிமா மற்றும் திரைப்பட விநியோக நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வார இறுதியிலும் 3 படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் பெண்களுடன் சமூகமளிக்கும் சிறுவர்களை கருத்தில் கொண்டு மேலதிகமாக 1 படம் காண்பிக்கப்படவுள்ளது.
குறித்த திரையரங்கில் 154 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திரையிடப்பட்டுள்ள படங்கள் குறித்த விபரம் 3 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படுமென அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் டிக்கெட் விலைகள் தோஹாவில் உள்ள மற்றைய முக்கிய திரையரங்குகளின் வி.ஐ.பி டிக்கெட் விலையை ஒத்ததாக இருக்குமென்பதுடன் இடைவேளையின் போது சத்தான உணவு மற்றும் பானங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment