Wednesday 29 June 2011

சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

டெல்லி: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.




சமீபத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ தொழிற்சாலைக்காக வழங்கப்பட்டிருந்த நிலங்களை கையகப்படுத்தி மீண்டும் விவசாயிகளிடம் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற் கூறி விட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது டாடா நிறுவனம். இந்த முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கு வங்க அரசு நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை பிறப்பித்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மேற்கு வங்க அரசே வைத்திருக்கலாம். இருப்பினும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்போதையை நிலையே நீடிக்க வேண்டும். நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கக் கூடாது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வாதங்களை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment