Monday, 25 July 2011

உ.பி : சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி: முலாயம் முடிவு

உ.பி.சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முலாயம் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகிற 2012 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகா : பா.ஜ.க.அரசின் அராஜக போக்கை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் கண்டன ஆர்ப்பாட்டம்


மங்களூர் : மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரித்தும் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்து நகரில் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது.
 

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் 6 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக டெல்லி போசாரிடம் கைது

டெல்லி: டெல்லியில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கிரேட்டர் கைலாஷ்-2 பகுதியில் ஒரு பிளாட்டில் தங்கியிருந்து இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தலைபோகிற விஷயம்...!


முதலில் இதைப் படியுங்கள்

- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

கர்நாடகா: எதியூரப்பாவுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவுமா குழப்பத்தில் முதல்வர்

பெங்களூர் : தான் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் தனது மகன் ராகவேந்திரா அல்லது தனக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபா கரந்லஜேவைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கீசியர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்


சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.

தி.மு.க. தலைவராக கருணாநிதியே நீடிப்பார்: பொதுக்குழுவில் முடிவு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூரில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று கூடியது.

இதில், கருணாநிதி தலைமை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக, தலைமைப் பதவி குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்பட்ட நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

மரணித்து போய்விட்ட சீன மனிதம் : சிறுவன் வதைக்கப் படும் கொடூரக் காட்சி

பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கு  அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும் உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளனர்.

புற்றுநோயாளிகளுக்கு உதவும் இஞ்சி

புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன்

மூத்த வழக்கறிஞரான ரோஹின்டன் நாரிமன் அடுத்த புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட உள்ளார்.
இதுவரை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்பிரமணியம், வழக்கு ஒன்றில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனியார் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது தம்மை அவமதித்த செயலாகும் என்று கூறி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அப்பதவிக்கு ரோஹின்டன் நாரிமனை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை : மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினுக்குப் பதில், புதிய கமிஷனராக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் பி.ஏவான எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தன் படையை வாபஸ் பெற்ற பின் ஆசிய நாட்டிற்குள் அமெரிக்காவின் போலீஸ்: பாகிஸ்தான் நாளிதழ்

இஸ்லாமாபாத் : அமெரிக்க செயலர் ஹில்லாரி கிளிங்டன் இந்தியாவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா-பசிபிக்கிற்கு காவலாளியாக நியமித்துள்ளது என்று கூறியுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளா : நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு

கோழிக்கோடு:சுதந்திர தினத்தையொட்டி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரள மாநிலத்தில் 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச்செயலகம் தீர்மானித்துள்ளது.

புனலூர்,சாவக்காடு, மஞ்சேரி, தாமரச்சேரி ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

நார்வே:கூட்டுப்படுகொலை நடப்பதற்கு முன்பே திட்டத்தை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது

ஓஸ்லோ : நார்வேயில் நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பே கிறிஸ்தவ வலதுசாரி பயங்கரவாதி ஆண்டேர்ஸ் ப்ரவிக் போலியான பெயரில் தனது திட்டத்தை விவரிக்கும் குறிப்புகளை விரிவாக விளக்கும் 1500 பக்கங்களை கொண்ட ஆன்லைன் புத்தகத்தை வெளியிட்டதாக நார்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் முதல் புல்லட் ரயில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் நின்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் மீது, மற்றோரு புல்லட் ரயில் மோதியதில் 35 பேர் பலியாகினர். மேலும் 191 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் ஹாங்ஹூ நகரில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள பியூஷுவுக்கு நகருக்கு D3115 என்ற புல்லட் ரயில் நேற்று புறப்பட்டது. வென்ஷியு நகர் அருகே வந்த போது மின்னல் தாக்கியதால் மேற்கொண்டு இயங்க மின்சாரம் இல்லாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.

தியோபந்த்: மோடியின் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கிய துணைவேந்தர் பதவி நீக்கம்

தியோபந்த் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டியதால் பிரச்சனையில் சிக்கிய தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முகம்மத் வஸ்தான்வி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

சவுதி அரோபியாவில் சிக்கி தவிக்கும் 25 தமிழர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ராஜீவ்காந்தி, வீரப்பன், சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கணேஷ் ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். 

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!

அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். இவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒரிஸ்ஸாவில் தலித் எம்.எல்.ஏ, மீது தீண்டாமை கொடுமை!

புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரப்பூர்வமான கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்டலில் சிக்கினார் கேட் மிடில்டன்

யூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் விவகாரத்தில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவியார் கேட் மிடில்டன் மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.