Thursday 4 August 2011

பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி இயக்கமும், எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் சேர்ந்து அடக்கி ஒடுக்கபட்டுள்ள மக்களின் அவலம் பற்றிய பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி இயக்கமும், எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் பலஸ்தீன், கஷ்மீர் உட்பட முஸ்லிம் உம்மா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கூட்டாக தீர்வுகானவும், அந்த பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் விழிபுணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளது. 

இந்தியா - ரஷ்யா இடையில் இலகு விசா நடைமுறை - ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய - ரஷ்ய இலகு விசா நடைமுறைக்கு ரஷ்ய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு தொழில் ரீதியாகவும்,
சுற்றுலா ரீதியாகவும் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனர். இதே போன்று ரஷ்யாவில் இருந்தும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ.2கோடியாக அறிவிப்பு!

தமிழக சட்ட சபை தொகுதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்படுவதாக
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.

சிரியாவிலிருந்து தூதரை திரும்ப பெற்றது இத்தாலி

ரோம் : சிரியா தலைநகரில் பணியாற்றி வந்த இத்தாலி தூதரை நாட்டிற்கு திரும்புமாறு இத்தாலி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ளது இத்தாலி.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் : ரூ. 912 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட லேப்டாப் வழங்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலவச ஆடு, மாடு திட்டத்துக்கு ரூ. 191 கோடி, நெல்லை, ஓரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் : பட்ஜெட் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையும், புறநகர் காவல்துறையும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் ஓபன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள் - வீடியோ காட்சிகள்

1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு சிறு குழு இன்று இறைவனின் உதவியால் பல கிளைகளாக படர்ந்து விரிந்து இந்திய தேசம் முழுவதும் வீரியத்துடன் செயல்பட்டு வரும் இஸ்லாமிய சமூகத்தின் பேரியக்கமே  
"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா".

வக்ஃப் நிலத்தில் மோசடியாக கட்டிய அம்பானியின் கனவு இல்லம் - மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்

மும்பை : ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.