Thursday, 4 August 2011

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் : ரூ. 912 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட லேப்டாப் வழங்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;


அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று இத்திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நன்மைகளைப் பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் அவர்களது அறிவுநுட்பமும், திறனும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். 

2011-2012-ம் ஆண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 லட்சம் மடிக் கணினிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இந்த திருத்த வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ. 912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment