Thursday 4 August 2011

இந்தியா - ரஷ்யா இடையில் இலகு விசா நடைமுறை - ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய - ரஷ்ய இலகு விசா நடைமுறைக்கு ரஷ்ய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு தொழில் ரீதியாகவும்,
சுற்றுலா ரீதியாகவும் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனர். இதே போன்று ரஷ்யாவில் இருந்தும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்திற்காக விசா விண்ணப்பிப்போருக்கு இலகுவாகவும், விரைவாகவும் விசா கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கடந்த டிசெம்பர் மாதம் கைச்சாத்தானது.

இரு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் சிக்கல் இன்றி விரைவாக விசா வழங்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் இடமளிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்திருத்திருந்தது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதுடன் பின் இரு நாட்டு அதிபர்களின் இசைவுக்கு பிறகு சட்டமாக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment