தமிழகத்தில் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை வளர்ச்சி 27.16 சதவீதமாக
அதிகரித்துள்ளது என்று தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்
எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Wednesday, 20 July 2011
நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது
சென்னை,ஜூலை.20 - நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக கடந்த 15 நாட்களில் சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் கமிஷனர் ஜே,கே. திரிபாதி தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திரா துமலபள்ளியில் இருப்பதாக தகவல்:
ஆந்திர மாநிலம் துமலபள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் சுரங்கம் உலகம் மிகப்பெறும் யுரேனியம் சுரங்கமாக மாறும் வாய்ப்பிருப்பதாக, அணு சக்தி தூறை செயலர் சிறீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செயற்கோள்
உதவியுடன் இயங்கும் நவீன ஜிபிஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி
பணிக்கு செல்லாமல் போலீசார் டிமிக்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டு போட எம்பிக்களுக்கு லஞ்சம்..அமர் சிங்கை விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாடாளுமன்றத்தில் நடந்த
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க் கட்சி
எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக ராஜ்யசபா
எம்பியும், முன்னாள் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர் சிங்கிடம்
விசாரணை நடத்த ராஜ்யசபா சபாநாயகரான துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி
அனுமதி அளித்துள்ளார்.
முல்லா ஓமர் கொல்லப்படவில்லை - தாலிபான்கள் மறுப்பு
கடந்த மே மாதம் தாலிபான்
இயக்க தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால்
தற்போது, அந்த செய்தி தவறானது என்று தாலிபான் இயக்கத்தினர் மறுக்கின்றனர்.
காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது
காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன்
காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க
நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம்
சிறைப்பிடித்துள்ளது.
முர்டாக் மீது திடீர் தாக்குதல்
தொலைபேசி
ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றக் குழுவின் முன்பு
ஆஜராகியிருந்த நியூஸ் ஆப்திவோல்டு செய்தி நிறுவன உரிமையாளர் முர்டோக்(79)
மீது ஆசாமி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறக்கூடாது: இந்தியா
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு ஹால்டிக்கெட் அனுப்பப்படுகிறது
ஒருங்கிணைந்த
சார்நிலை பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வருகிற 30 ந் தேதி
நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து
விண்ணப்பதாரர்களுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது.
ஃபயாஸ் உஸ்மானியின் மரணத்தைக் குறித்து விசாரணை நடத்த எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு வழக்கு
தொடர்பான விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின்
மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என சோசியல்
டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)