Wednesday, 20 July 2011

உலகின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திரா துமலபள்ளியில் இருப்பதாக தகவல்:


ஆந்திர மாநிலம் துமலபள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் சுரங்கம் உலகம் மிகப்பெறும் யுரேனியம் சுரங்கமாக மாறும் வாய்ப்பிருப்பதாக, அணு சக்தி தூறை செயலர் சிறீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.


அணு மின் உலை திறப்பு விழாவில் சிறீகுமார் பானர்ஜி
ராஜஸ்தான் மாநிலம் ரவத்பதாவில் புதிய அணு மின் உலை அமைப்பதற்கு நேற்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறீகுமார் பானர்ஜி, ஆந்திராவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் சுரங்கம் பற்றி சில தகவல்களை கூறினார்.

துமல பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியம் சுரங்கத்தில் 49 ஆயிரம் டன் யுரேனியம் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலவேளை இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கலாம். சரியான கணக்கெடுப்பின் படி அவை 1.5 லட்சம் டன் தாதுகளுக்கு அதிகமாக இருந்தால் உலகின் மிகப்பெரிய யுரேனியம் சுரங்கமாக இது அறிவிக்கப்படும்.

இந்த யுரேனியம் சுரங்கத்தின் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள அணுமின் நிலையத்துக்கு 40 ஆண்டுகளுக்கு எரிபொருள் வழங்கல் செய்ய முடியும்.

ஏற்கனவே ஜார்ஜ்கண்ட், மேகாலயா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் யுரேனியம் சுரங்கங்கள் இருப்பதால், ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சுரங்கத்தையும் சேர்த்து கணக்கிட்டால் 1.7 இலட்சம் டன் யுரேனியம் தாதுக்கள் இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் யுரேனியம் எரிபொருள் தேவைக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறைவடையும்.

இன்னும் 6 மாதத்தில் புதிய சுரங்கத்தில் யுரேனியம் வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்படும். எனினும் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டதை போன்று உயர் வகை யுரேனியம் ஆந்திராவில் இல்லை என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment