Wednesday 20 July 2011

போலீஸ் தாக்குதலில் 20 உய்கூர் முஸ்லிம்கள் படுகொலை

பீஜிங்:சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வடமேற்கு பிரதேசமான ஜிஞ்சியாங்கில் 20 உய்கூர் முஸ்லிம்கள் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஹோட்டன் நகரத்தில் நடந்த தாக்குதலில் 14 பேர் போலீஸாரின் தாக்குதலிலும் ஆறுபேர் துப்பாக்கிச்சூட்டிலும் கொல்லப்பட்டனர். 


இத்தகவலை நாடுகடத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் அமைப்பான வேர்ல்ட் உய்கூர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 அதேவேளையில், நகரத்தில் போலீஸ் ஸ்டேசனை தாக்கிய தீவிரவாதிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்குபேர் கொல்லப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

உய்கூர் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதை கண்டித்து போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஜிஞ்சியாங்கில் பெரும்பான்மையாக வாழும் ஹான் இனத்தவர் உய்கூர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகும். 

2009 ஜூலையில் தலைநகரான உரும்கியில் நடந்த தாக்குதலில் 140 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறில் ஹான் இனத்தவருடன் போலீஸும் சேர்ந்து உய்கூர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

No comments:

Post a Comment