Wednesday 20 July 2011

ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறக்கூடாது: இந்தியா

ஆஃப்கானிஸ்தான் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் பலம் பெறும்வரை அந்நாட்டை விட்டு அமெரிக்காவும், அதன் நேச நாட்டுப் படைகளும் வெளியேறக் கூடாது என்று அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.


இந்தியா வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுடன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணா, ஆஃப்கானிஸ்தானில் நிலவும் எதார்த்த சூழலை அமெரிக்க கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
“ஆஃப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் பாதுகாப்பான நிலைக்குத் தன் நாடு வந்துள்ளது என்று கருதும் வரை அந்நாட்டை விட்டு அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் வெளியேறக் கூடாது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்திடும் முயற்சியில் தாலிபான்களையும் ஈடுபடுத்துவது குறித்து இந்தியாவின் ஐயத்தை தெரிவித்துள்ளதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment