Sunday 5 June 2011

சுற்றுலாத்தலங்களில் துபாய்க்கு 9-வது இடம்

துபாய்: வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் முதல்10 நாடுகளில் 9-வது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலாவாக வந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர்.


இதற்கு அடுத்த படியாக கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் லண்டனிற்கு அடுத்த படியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப்பது குவைத் மற்றும் பீஜிங் நகரமாகும். தற்போது மூன்றாவது இடத்தை துபாய் பிடித்துள்ளது.

தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்.

சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க வளைகுடா வாழ்இந்தியர்களுக்கு “இடி” விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்! தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.

ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?

ரஃபா எல்லைக் கடவை இன்று எகிப்திய அதிகாரத் தரப்பினால் திடீரென மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை என ரஃபா எல்லைக் கடவைக்கான காவற்படைப் பணிப்பாளர் ஐயூப் அபூ ஷார் தெரிவித்துள்ளார்.


உள்ளகத்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலஸ்தீனில் இருந்து எகிப்து நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களுக்கு ரஃபா எல்லைக் கடவையைத் தாண்டிச் செல்ல எகிப்திய அதிகாரத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் இமாம் கொமைனியின் நினைவில்


டெஹ்ரான்:இஸ்லாமிக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லா கொமைனியின் நினைவு நாளில் லட்சக்கணக்கான மக்கள் ஈரானின் நகரங்களில் திரண்டனர்.

கொமைனி மரணித்து 22 வருடங்கள் முடிவுறும் நாளான நேற்று டெஹ்ரானின் தெற்கு பகுதியில் சிறப்பு நினைவுதின நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரை நோக்கி திரண்டு வந்தனர்.

பாபா ராம்தேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜண்டா-எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடத்தப்படுவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.




சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள் விஷயத்தில் ஒளிவு மறைவில்லாத நிலைப்பாடு ராம்தேவிற்கோ அவரின் பின்னணியில் செயல்படுபவர்களுக்கோ இல்லை.ஆர்.எஸ்.எஸ் உத்தரவிட்ட அஜண்டாவை செயல்படுத்துவதுதான் ராம்தேவின் நோக்கம் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாபா ராம் தேவ் கைது:ஆதரவாளர்கள்-போலீஸ் மோதல்

POPULARFRONT - MUTHUPET
புதுடெல்லி:டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்ட நாடகத்தை நேற்று துவக்கிய ஆர்.எஸ்.எஸ்-ன் யோகா குரு ராம்தேவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.