துபாய்: வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் முதல்10 நாடுகளில் 9-வது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலாவாக வந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர்.
இதற்கு அடுத்த படியாக கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் லண்டனிற்கு அடுத்த படியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப்பது குவைத் மற்றும் பீஜிங் நகரமாகும். தற்போது மூன்றாவது இடத்தை துபாய் பிடித்துள்ளது.
முக்கிய தலங்களில் முதல் 20 இடங்களை பொறுத்த வரையில் ஐரோப்பிய நாடுகள் 10 இடங்களை பிடித்துள்ளது. அதில் லண்டனிற்கு ஆண்டு தோறும் 20.1 மில்லியன் மக்களும், பாரீஸ் நகருக்கு 18.1 மில்லியன் மக்களும் வருகை தருகின்றனர்.இதை தவிர ஆசிய கண்டத்தை பொறுத்த வரையில் பாங்காங், சிங்கப்பூர்,மற்றும் ஹாங்காங் நகரங்கள் இடம் பிடித்துள்ளது.
முதல் 20 நாடுகளின் வரிசையில் ஆசிய பசிபிக் நாடுகள் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் நியூயார்க் நகருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் அவை 12 இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment