Sunday 5 June 2011

ஈரான் இமாம் கொமைனியின் நினைவில்


டெஹ்ரான்:இஸ்லாமிக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லா கொமைனியின் நினைவு நாளில் லட்சக்கணக்கான மக்கள் ஈரானின் நகரங்களில் திரண்டனர்.

கொமைனி மரணித்து 22 வருடங்கள் முடிவுறும் நாளான நேற்று டெஹ்ரானின் தெற்கு பகுதியில் சிறப்பு நினைவுதின நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரை நோக்கி திரண்டு வந்தனர்.


மக்களின் இஸ்லாமிய எழுச்சிப் போராட்டங்களுக்கும் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் உலகத்தின் எப்பகுதிகளில் சலனங்கள் உருவானாலும் ஈரான் அதனை ஆதரிக்கும் என அந்நாட்டின் உயர்மட்ட ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் ஸய்யித் அலி காம்னஈ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:அமெரிக்காவும், இஸ்ரேலும் ஸ்பான்சர் செய்யும் தாக்குதலை ஆதரிக்க எங்களால் இயலாது. ஆக்கிரமிப்பு நாடுகளை அனைத்து சக்திகளை உபயோகித்து எதிர்ப்போம்.

மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் நடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அரபுலகின் புரட்சியை ஹைஜாக் செய்ய முயலும் அமெரிக்காவின் செயல் பிராந்தியத்தின் விருப்பங்களுக்கு எதிரானது.

மேற்கத்தியர்களின் இத்தகைய நடவடிக்கைகளை முஸ்லிம் உலகம் மிகவும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். இமாம் கொமைனி காண்பித்த வழியில் சஞ்சரிக்கும் ஈரானுக்கு அமெரிக்காவின் சதித்திட்டங்களை அடையாளம் காண இயலும். இவ்வாறு காம்னஈ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment