Sunday, 5 June 2011

பாபா ராம்தேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜண்டா-எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடத்தப்படுவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.




சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள் விஷயத்தில் ஒளிவு மறைவில்லாத நிலைப்பாடு ராம்தேவிற்கோ அவரின் பின்னணியில் செயல்படுபவர்களுக்கோ இல்லை.ஆர்.எஸ்.எஸ் உத்தரவிட்ட அஜண்டாவை செயல்படுத்துவதுதான் ராம்தேவின் நோக்கம் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.ஜ.கவின் உள்பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதே இந்த நாடகத்தின் நோக்கம்.பா.ஜ.க தலைமை வகிக்கும் கர்நாடகா மாநில அரசு ஊழலில் மூழ்கி இருக்கவே ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப ஹிந்துத்துவா சக்திகளுக்கு தகுதி இல்லை.பொது வாழ்க்கையில் தீமைகளை அழித்தொழிக்க போராடுபவர்களின் சுத்தமான எண்ணத்தை கூட இத்தகைய போலி கதாபாத்திரங்கள் சந்தேகத்தில் ஆழ்த்துகின்றன.

ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடச்செய்ய மத்திய அரசு நடத்திய முயற்சிகள் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கவே உதவும்.இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment