Sunday 5 June 2011

பாபா ராம் தேவ் கைது:ஆதரவாளர்கள்-போலீஸ் மோதல்

POPULARFRONT - MUTHUPET
புதுடெல்லி:டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்ட நாடகத்தை நேற்று துவக்கிய ஆர்.எஸ்.எஸ்-ன் யோகா குரு ராம்தேவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.




போலீசார் மீது கல்வீசி தாக்கிய ராம்தேவின் ஆதரவாளர்களை போலீசார் கண்ணீர் புகை உபயோகித்து அப்புறுப்படுத்தினர். ராம்லீலா மைதானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதே வேளையில் ராம்தேவை கைது செய்த செய்தியை போலீஸ் மறுத்துள்ளது. பாதுகாப்பான இடத்திற்கு அவரை மாற்றியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.


மோதலுக்கு இடையே உண்ணாவிரதம் இருந்த பந்தலின் ஒருபகுதி தீக்கிரையானது. சம்பவ இடத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிரடி படையினர் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி இரவில் வாபஸ் பெற்றதை தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் அரங்கேறின.


ராம்தேவ் டெல்லியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. போலீஸ் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராம்தேவின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அப்பகுதியில் மோதல் சூழல் நிலவுகிறது.



No comments:

Post a Comment