Wednesday, 22 June 2011

2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு

ஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.

இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.

துருக்கி - இஸ்லாமிய அரசியலை நோக்கி

தேர்தல் அரசியலில் பங்கேற்று இஸ்லாமிய அரசியலை நோக்கிய பயணத்திற்கான ஒரு நிகழ்கால உதாரணத்தைத் தருகிறேன்.


துருக்கி! நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் இஸ்லாமிய உலகின் தலைநகராக இருந்த நாடு. பின்னர் முஸ்தபா கமால் பாட்சா என்பவன் தலைமையில் அந்நாடு வந்தபின், இஸ்லாமிய அடையாளம் முழுமையாக அகற்றப்பட்டு, யூரோப்பிய நாகரீகத்தின்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஜூலை 30ம் தேதி நடைபெறும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

மொத்தம் 4,329 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி முதல் சென்னையில் கவுன்சிலிங்

சென்னை : "மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்கும். இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 66 பேர், அனைத்து முக்கிய பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறினார். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளுக்கு, 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக வளாகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நேற்று மாலை வெளியிட்டார்.


உ.பி.,யில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு :மாநில அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

லக்னோ : உத்தர பிரதேசத்தில், கடந்த இரு நாட்களுக்குள், ஐந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலையும் செய்யப்பட்ட கொடூர சம்பவங்களை அடுத்து, இப்பிரச்னையைத் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மாநில மனித உரிமை கமிஷன், இதுகுறித்து, மாநில அரசுக்கும், போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் தற்போது கடுமையாக அதிகரித்து வருகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபல ஜேர்மனி பருவ நிலை விஞ்ஞானி இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கட்டுரை அமெரிக்க இதழான நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் புத்தகத்தில் வெளியாகி உள்ளது.

நூற்றுக்கணக்கானோரால் சிதைக்கப்பட்ட கேரள மாணவி-முக்கிய தமிழக அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள்

நாகர்கோவில்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் பல முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


நூற்றுக்கும் மேற்பட்டோரால் இந்த சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல்

வாஷிங்டன், ஜூன்.22: தலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.



அல் காய்தா தலைவர் பின்லேடனை சமீப காலமாக யாரும் விரும்பவில்லை என்றாலும் அவரது மரணம் மோசமான ஒன்று என பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 14 சதவீதத்தினர் மட்டுமே அவரது மரணம் நல்ல விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.


‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்?

அதிக‌ம் சா‌ப்‌பிடலா‌ம்!



அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

சிறுபான்மையின மக்களை காக்க புதிய சட்டங்கள்

புது டெல்லி: கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.


இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையின மக்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காக நிறுவப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து நடப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வரை அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்டாரா பிரணாப் முகர்ஜி?

டெல்லி: தன்னுடைய அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொறுத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியில், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். அதில், எனது அலுவலகத்தை உளவு பார்க்க முயற்சி நடந்துள்ளது. 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2 வருட உத்தரவாதத்துடன் கூடிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இலவசமாக வினியோகிக்கப்படவுள்ளன. இவற்றைத் தயாரித்து வழங்குவது குறித்து இவற்றின் தயாரிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.


தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட லாரன் பூத்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.


இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.

லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.




வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியா அல்லது எம்பிக்கலின் வளர்ச்சிநிதியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.


நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு

பெர்லின் : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.


தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு

புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.



அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனர்.



ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 20-ம் தேதி சுமார் 730 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தப் படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த அம்புஜம், இருளாண்டி, பால்ராஜ், பொன்னழகு, ஞானசேகரன் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.