Saturday, 11 June 2011

தல்ஃபித் கிராமத்தில் 8 பலஸ்தீனர்கள் கைது

கடந்த வெள்ளிக்கிழமை (10.06.2011) அதிகாலை மேற்குக்கரை தல்ஃபித் கிராமத்தில் எட்டு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



அதிகாலை நேரத்தில் மேற்படி கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அவற்றைத் தலைகீழாகப் புரட்டி அட்டகாசம் செய்ததோடு, பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். அவர்களின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை ஆட்சேபித்த பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்புப் படை கைதுசெய்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடாபி படைகள், மிஸுராட்டாவில் தாக்குதல் : 31 பொதுமக்கள் பலி .

லிபியாவின் மிஸுராட்டா நகரில் கடாபி இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பீரங்கிகள், ஆட்டிலெறி, ராக்கெட் எறிகணைகளை கொண்டு மிஸ்ரூட்டாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது கடாபி இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 61 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் ...


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகை
க்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

ஊழல் பீதியினால் சொத்து விவரங்களை வெளியிட குஜராத் அமைச்சர்கள் தயக்கம்


ஊழல் குறித்த நாடுதழுவிய விழிப்புணர்வை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக காய்நகர்த்தி வரும் பாஜகவுக்கு ஆப்புவைக்க காங்கிரஸ் குஜராத் முதல்வர் ந்ரேந்திர மோடியின் அமைச்சர்களைக் குறிவைத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் ஜூன் மாத இறுதிக்குள் குஜராத் அமைச்சர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துக்கள், அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் பற்றி விவரங்களை தர வேண்டும் என மாநில முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் முதல்வரின் உத்தரவினை நிறைவேற்ற முடியாத நிலையில் அமைச்சர்கள் சிலர் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பாபா ராம்தேவ் ஹிமாலாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்பார்க்க அரசியல்வாதிகளும் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வருவதால் அந்த மருத்துமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளர்களை சந்திக்க வரும் உறவினர்களை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்காததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். நோயாளர்களை நலம் விசாரிக்க வரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் (Know இஸ்லாம்) இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் கருத்தரங்கம் !!!


சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணம் அல்ல என்றும், சில பார்ப்பனர்களின் முயற்சிதான் காரணம் என்றும் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

நோயுற்ற கைதியை விடுவிக்க செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை


கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் மகனை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து விடுவித்துத் தருமாறு கோரி, தமூன் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஸாலிம் பனீ உதேஹின் தாயார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
தன்னுடைய மகனின் உடல்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து நேருமாயின், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகமே அதனைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் அப் பெண்மணி தெரிவித்துள்ளார்.

கொகா கோலா ரகசியம் மக்களே உஷார்! உஷார் !!




உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய போலீஸ்


ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய போலீஸ் அடாவடித்தனமாக கண்ணீர் புகை போன்றவற்றை பயன்படுத்தி விரட்டியடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கியதை தொடர்ந்து புனித இடத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களுடன் மோதல் ஏற்பட்டதாக இஸ்ரேலிய போலீஸின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

இச்சம்பவத்தில் அநியாயமாக 3 பலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேலிய போலீஸ் கைது செய்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மூத்த ஹமாஸ் தலைவர் வாஸ்பி கபா உள்ளிட்ட எட்டு பலஸ்தீனர்களை கடத்தி சென்றுள்ளதாக பலஸ்தீன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அரசில் கபா சிறைக்கைதிகள் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இஸ்ரேலிய சிறையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010 வரை அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குறைந்த பட்சம் 11 ஹமாஸ் அரசியலாளர்களை கைது செய்திருந்தது.

இந்தியாவில் அடக்கஸ்தலம்:ஹுஸைன் குடும்பம் நிராகரிப்பு


புதுடெல்லி:எம்.எஃப் ஹுஸைனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரலாம் என மத்திய அரசு அளித்த வாக்குறுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசித்துவந்த எம்.எஃப்.ஹுஸைனுக்கு கையாலாகாத மத்திய அரசு அவரது பாதுகாப்பிற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கேவலமாக விமர்சித்து புத்தகம் எழுதிய பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரினுக்கு புகலிடம் அளித்தது.

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு 2011-12 ஆண்டுக்கான கல்வி உதவி!


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.
பள்ளி படிப்பு 
தகுதி : 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு - அதிமுக ஆட்சிக்கு விழுந்த முதல் அடி

கல்வியாளர்களும் அரசியல் கட்சிகளும் முந்தைய தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதிலும் பிடிவாதமாக சமச்சீர் கல்வியயை நடப்புக் கல்வியாண்டில் ரத்து செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15 ஆம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

பாசத்தை கொடுக்கும் பெற்றோர்கள் எய்ட்சை கொடுத்து சாதனை!

கொல்கத்தா : இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்தே அவர்களுக்கு பரவியுள்ளது என்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் மற்றும் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டியின் கருத்தரங்கு, மேற்குவங்காளம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

இதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள