Saturday 11 June 2011

சமச்சீர் கல்வி தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு - அதிமுக ஆட்சிக்கு விழுந்த முதல் அடி

கல்வியாளர்களும் அரசியல் கட்சிகளும் முந்தைய தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதிலும் பிடிவாதமாக சமச்சீர் கல்வியயை நடப்புக் கல்வியாண்டில் ரத்து செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15 ஆம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.



இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்ததோடு, தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார்.

சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?

சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் அரசுக்கு ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. இதற்கு யார் பொறுப்பு?

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா? திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள் என்பதால் இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆரவாரமாகத் தொடங்கிய அதிமுக அரசின் சமச்சீர் கல்வி நத்து நடவடிக்கைக்கு அதிமுக ஜால்ரா கட்சிகளும் இந்து முன்னணி போன்ற மதவாதக் கட்சிகள் மட்டுமே ஆதரவளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment