Saturday, 11 June 2011

தல்ஃபித் கிராமத்தில் 8 பலஸ்தீனர்கள் கைது

கடந்த வெள்ளிக்கிழமை (10.06.2011) அதிகாலை மேற்குக்கரை தல்ஃபித் கிராமத்தில் எட்டு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



அதிகாலை நேரத்தில் மேற்படி கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அவற்றைத் தலைகீழாகப் புரட்டி அட்டகாசம் செய்ததோடு, பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். அவர்களின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை ஆட்சேபித்த பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்புப் படை கைதுசெய்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேற்படி பலஸ்தீனர்கள் அனைவரும் கரங்கள் முதுகுப் புறமாகக் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புப் படையினரால் வதை முகாம்களை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அதிகாலை அல்லது நள்ளிரவு வேளைகளில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டை என்ற போர்வையில் பெண்களையும் குழந்தைகளையும் ஆயுதமுனையில் அச்சுறுத்துவதையும், பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்பு முகாம்களுக்கு இழுத்துச் செல்வதையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தன்னுடைய வழமையாகக் கொண்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment