Monday 13 June 2011

அமெரிக்காவை மிஞ்சும் சீனா

அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது.

கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார்.



கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது.



கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,"தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நிலையில் அமெரிக்காவுக்கு போட்டி போடும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது. சமீப ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை நவீனப்படுத்திக் கொள்ள அமெரிக்காவின் உதவியை சீனா எதிர்பார்த்துள்ளது" என்றார்.



அமெரிக்காவின் ஆதிக்கம் 50 ஆண்டுகளாக தான் உள்ளது. ஆனால் இரண்டு ஆயிரம் ஆண்டுகளில் 1600 ஆண்டுகள் சீனா ஆதிக்கம் தான் காணப்பட்டது. அமெரிக்கா புதிய உலகில் நுழைகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது விலகிக் கொள்ளவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment