Monday 13 June 2011

14 வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த உ.பீ போலீசின் மிருகத்தனம்

லகிம்பூர் கேரி:உ.பி மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயதான முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த படுபாதக சம்பவத்தின் பின்னணியில் போலீசார் செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.



உ.பி மாநிலம் லகிம்பூர் பகுதியில் இன்திஸாம் அலி-தரானம் முஸ்லிம் தம்பதிகளின் மகள் சோனம் தான் இந்த கொடூரத்திற்கு பலியாகியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை முதல் மகளை காணவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலையில் கால்நடைகளை மேய்க்க சென்றுள்ளார் சோனம். மதியம் கழிந்த பிறகும் மகளை காணாததால் தாயார் அவரை தேடிச் சென்றுள்ளார்.


அப்பொழுது கால்நடைகள் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்ததை கண்டுள்ளார். சிறிது நேரம் தேடிய பொழுது போலீஸ் ஸ்டேசன் காம்பவுண்ட் மரத்திற்கு அருகில் தனது மகளின் இறந்த உடலையும் அவர் கண்டறிந்தார்.

மகளின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், காயங்களில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும் தாயார் கூறுகிறார். தங்களின் மகளை போலீஸ்காரர்கள் பாலியல் வன்புணர்வு செய்து பிறகு கொலை செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அச்சிறுமி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை குறித்து உ.பி. மாநில சிறப்பு டி.ஜி.பி பிரிஜ்லால் கூறியதாவது:நான் எஸ்.பியுடன் பேசினேன். உடல் மரத்தில் தொங்கி கிடந்ததாக அறிந்தேன். எஸ்.பி சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் இதனை உறுதிசெய்யவில்லை. இச்சம்பவம் மிகவும் துயரமானது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வழக்கு தொடர்பாக போலீஸ் ஸ்டேசன் ஹவுஸ் ஆபீசர் உள்பட 11 போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எவரும் கைது செய்யப்படவில்லை

No comments:

Post a Comment