Saturday 22 October 2011

ஜனசேதனா யாத்திரை அத்வானியின் குடும்ப யாத்திரை: ஆர்.எஸ்.எஸ்


புதுடெல்லி: பா.ஜ.க ஊழலில் சிக்கி தவிக்கும் வேளையில் ஊழலுக்கு எதிரான போராளியாக களமிறங்கியுள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பு புகழ் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையை அவரது குடும்ப யாத்திரை என பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அத்வானியின் ஜனசேதனா யாத்திரைக்கு பேரணிகள் தேவையில்லை என சங்க்பரிவார தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளை ஆதாயமாக்க குடும்பத்தினருடன் ரதயாத்திரை கிளம்பியுள்ள  84 வயதான அத்வானிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்ப்பால் வரவேற்பு மங்கியுள்ளது.

கத்தாஃபியின் மரணம்:ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான எச்சரிக்கை – ஈரான்


டெஹ்ரான்:கத்தாஃபியின் மரணம் இதர ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு பாடம் என ஈரான் தெரிவித்துள்ளது. அவமானம் நிறைந்த வெட்கக்கேடான பதவியிறக்கம் தான் அனைத்து ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காத்திருப்பதாக என கூறிய ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரமீன் மஹ்மான் பரஸ்த், லிபியாவின் தேசிய சீர்திருத்த கவுன்சிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அத்தியாயத்திற்கு துவக்கம் குறிக்க அடுத்து வரும் அரசுக்கு இயலட்டும் என ஈரான் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழகம்:முதல் தேர்தலில் செல்வாக்கை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ


சென்னை:தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்களுக்கு நடந்த தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி கடுமையான போட்டிகளை ஏற்படுத்தி பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்றுள்ள இக்கட்சி போட்டியிட்ட பல இடங்களிலும் அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் எதிர்வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்ற இடங்கள் பின்வருமாறு:

ஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...


தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களாஇரு வாரங்களாக தெற்குஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.
அமெரிக்கா தொடர்ந்து மூக்கறுபடும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.
அமெரிக்காவின் தீவிரஆதரவாளரான,அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கானிஸ்தான்இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல்அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக்காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.

முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர் : அலவி மௌலானா


உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்திஇஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின்படுகொலை அமைந்துள்ளதுஎன மேல் மாகாண ஆளுநர்எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலைகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயேமேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது