Saturday 22 October 2011

முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர் : அலவி மௌலானா


உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்திஇஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின்படுகொலை அமைந்துள்ளதுஎன மேல் மாகாண ஆளுநர்எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலைகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயேமேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி ஏகாதிபத்தியமேற்குலக சதியாளர்கள் மேற்கொண்ட உத்திகள் பலவிதம்முஸ்லிம் நாடுகளின் பலத்தைமேற்குலகுக்கு சவாலாக எடுத்துக்காட்டிய தலைவர்களுள் மறைந்த கேணல் கடாபியும்குறிப்பிடத்தக்கவர்.
அவரது பலத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்துவதே மேற்குலகஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும்.
முஸ்லிம்களின் நாடுகளின் தலைவர்களை விரட்டும் சத்தித் திட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறதுஇவ் வேளையில் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இச் சதித்திட்டத்தை முறியடிக்க ஒன்று பட வேண்டும்.
ஆகவே நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து எமது பலத்தை மேம்படுத்திமேற்குலக சதிகாரர்களின் சதித்திட்டத்தை முறியடித்து இஸ்லாமிய உலகையும் முஸ்லிம்களையும்பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment