இ-மெயில்
மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர
வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது
சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.