Thursday 27 October 2011

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?



ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை பூசியது ஒரு பக்கம் இருந்தாலும் திருட்டு வேஷம் போடுவதற்குத்தான் இவர் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது பொது சிந்தனை உடைய அனைவருக்கும் தெரியும்.

இவர் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சில முஸ்லிம் தலைவர்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். முஸ்லிம்களுடைய ஆதரவும் எனக்கு உண்டு என்பதை வெளிக்காட்டுவதற்காக மோடி தன்னுடைய அபிமானி சிலரை அழைத்து தனக்கு ஆதரவு அளிப்பது போல் காட்டிக்கொண்டார். அதில் ஒருவர் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்றை நரேந்திர மோடிக்கு அனிவிக்க முயன்ற போது அதை மறுத்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் அனியும் தொப்பியை அணிய மறுத்தது நமக்கொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை மாறாக அவர் அணிந்திருந்தால்தான் நமக்கு ஆச்சரியமே ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று சேக்கிழான் என்ற புத்தி கெட்டி அயோக்கியன் கட்டுரை எழுதியுள்ளான். இப்படி ஒரு சம்பவத்தை வீடியோ பதிவு செய்த எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தும் அவை அனைத்தையும் முட்டாளுக்கும் விதமாக கட்டுரை எழுதிவிட்டு வழக்கம் போல் நரேந்திர மோடி பஜனை செய்துள்ளான். அதில் நரேந்திர மோடிக்கும் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் நரேந்திர மோடி கொண்டு செல்கிறார் என்றும் எழுதியுள்ளான்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் ஏற்பட்ட தீவிபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறி இந்துக்களை உசுப்பிவிட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் பொருளாதாரமும் சூரையாடப்பட்டது. 

இதற்காக வழக்கம் போல் மத்திய அரசும் விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. விசாரணையின் முடிவில் இரயில் பெட்டியில் உள்பக்கம் இருந்துதான் தீப்பிடித்திருகிறது என்றும் வெளியில் இருந்து கொண்டு யாரும் இரையில் பெட்டையை எரிக்கவில்லை என்று தெளிவான அறிக்கையை சமர்பித்தது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.


இந்தக்கலவரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்:

1. முன்னால் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் 60 வயது மதிக்கத்தக்கவருமான் இஹ்ஸான் ஜாஃபரி அவர்களும் அவர்களுடைய வீட்டிற்குள் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பி சென்ற 10ற்கும் மேற்பட்ட நபர்கள் இந்துத்துவ வெறியர்களால் கூறுகூறாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

2. பெஸ்ட் பேக்கரி என்ற பிரசித்த பெற்ற பேக்கரி கடையில் ஜாஹிரா ஷேக் என்ற பெண்மணியின் தந்தை மற்றும் கணவர் உட்பட பலரும் தீவைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். பேக்கரி கடையும் தீக்கரையாக்கப்பட்டது. பின்னர் நியாயம் கேட்டுச்சென்ற ஜாஹிரா ஷேக்கின் மீதே வழக்கு திருப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

3. நிறைமாத கற்ப்பிணியாக இருந்த கவுஸர் பானு என்ற பெண்ணி வயிற்றை கிழித்து அதில் இருந்த சிசுவை சூழாயுதத்தால் குத்தி கொலை செய்து பெட்ரோ ஊற்றி எறித்துவிட்டு பின்னர் அந்தப்பெண்ணையும் தீயிட்டு கொழுத்தி கொலை செய்தனர்.

4. பல்கீஸ் பானு என்ற பெண்ணை பல வெறியர்கள் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வண்புணர்ச்சி செய்துள்ளனர்.
இவையெல்லாம் நடைபெற்ற பல சம்வங்களில் ஒரு சிலவை தான் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இத்தகைய சம்பங்களை ஒரு போதும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடாது.

ஆனால் இந்துத்துவ வெறிபிடித்த தீவிரவாதியான சேக்கிழான் கூறும்போது மோடி அரசு கலவரத்தை தடுக்க எல்லாவிதமான முயற்ச்சியையும் செய்தது என்று உளறியுள்ளான். கல்வரம் நடைபெற்ற பிறகு குஜராத்தில் நடைபெற்ற அநியாயங்களை வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் தெஹல்கா பத்திரிக்கையின் நிருபரான ஆஷிஷ் கேத்தான் என்பவர் மிகுந்த ஆபத்திற்கு மத்தியில் கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு மத்தியில் உரையாடி அவர்களது வாயாலேயே உண்மைகளை படம்பிடித்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். ஒவ்வொரு இந்துத்துவ தீவிரவாதியும் தன் வாயினாலேயே இத்தனை முஸ்லிம்களின் கொன்றோம் என்றும், இத்தனை பெண்களை கற்பழித்தோம் என்றும், இவற்றிற்க்கெல்லாம் நரேந்திர மோடி தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் வாக்குமூலம் அளித்தனர்.

போதிய வலுவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை நரேந்திர மோடி கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குஜராத் மாநிலத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சியை உச்சகட்டத்தை நோக்கி செலுத்துவது போன்ற மாயயை ஏற்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் மீது இத்துனை அட்டூழியங்களையும் செய்துவிட்டு முஸ்லிம்களுக்கு நான் எதிரானவன் அல்ல என்று பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கும் நரேந்திர மோடியை ஒரு போதும் இந்த முஸ்லிம் சமூகம் மறக்காது. இத்துனை அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்ட பின்பும் இந்த முஸ்லிம் சமூகம் பொருமையாக இருக்கிறது என்றால் அது அவர்கள் இந்த நாட்டின் நீதித்துதுறையின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். நிச்சயம் ஒரு நாள் மோடி தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அடைந்தே தீருவார்.

நன்றி : http://chennaipopularfront.blogspot.com

No comments:

Post a Comment