Tuesday 26 July 2011

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன் - v


பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

1929  ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை  என்ற கோசத்தை
வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,P.426.)

தாடி வைத்திருந்ததால் பொறியியல் கல்லூரியில் இடம் கொடுக்க மறுப்பு.

பாட்னா: கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாடு பார்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்கள் என்றாலே எல்லா மாண மாணவிகளையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும், அவர்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதற்காகவே சீறுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏவுகணைகள் உருவாக்கும் பாகிஸ்தான் - ஜெட் விமானங்கள் தயாரிக்கும் இந்தியா

24 புதிய ஏவுகணைகளை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்கவுள்ளது இந்த ஆண்டாகத்தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகா: லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக சிவராஜ் வி.பாட்டீல் நியமனம்

பெங்களூர்: கர்நாடக லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீலை நியமிக்க ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போதைய நீதிபதியான சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்குப் பின்னர் புதிய நீதிபதியாக பாட்டீல் பதவியேற்பார்.

சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கு: சிபிஐ வழக்கறிஞர் விலக உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சியை அதிலிருந்து விலகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விலகிக் கொண்டார்.

பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முஸ்லிம் அமைப்புகளை மட்டும் குறிவைக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் உள்பட அனைத்து சாத்தியக் கூறுகளை குறித்தும் விசாரணை நடத்தவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்துத்துவாவை தப்பவைக்க நினைக்கும் புலனாய்வு துறைகள்!

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

ஜியோலாங் நீர் மூழ்கி கப்பலை கடலுக்கடியில் இயக்கி சீனா சாதனை

கடலுக்கடியில் 3 மனிதர்களுடன் சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

ஜியோலாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதில் நீர்மூழ்கியை சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.