Tuesday, 26 July 2011

கர்நாடகா: லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக சிவராஜ் வி.பாட்டீல் நியமனம்

பெங்களூர்: கர்நாடக லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீலை நியமிக்க ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போதைய நீதிபதியான சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்குப் பின்னர் புதிய நீதிபதியாக பாட்டீல் பதவியேற்பார்.

1998ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத்துறையில் அமைச்சர்கள் செயல்பட்ட விதம், கடைப்பிடிக்கப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கை குறித்து ஆராய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தவர் பாட்டீல் என்பது நினைவிருக்கலாம்.

லோக் ஆயுக்தா தலைவராக உள்ள நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தான் கர்நாடகத்தில் நடந்த சுரங்க ஊழல் குறித்து விசாரித்து முதல்வர் எதியூரப்பா உள்ளிட்டவர்களுக்கு எதிரான அறிக்கையை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே எதியூரப்பாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

No comments:

Post a Comment