Friday 29 July 2011

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!


பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் காவல்துறையின் அராஜகம் - போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுனருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர். காவல்துறையினரின் இந்த அராஜகம் குறித்து அவரது மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சுதந்திரம் என்பது நமது உரிமை சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிக்கை

 

65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3-ஆண்டுகளாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி சிறப்பித்து வருகின்றது. இவ்வருடமும் ஆகஸ்ட் 15-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம்.

லோக்பால் மசோதா : சட்டமல்ல, கண்துடைப்பு!

கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

நாளை குரூப் 2 தேர்வு : தேர்வர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை

தருமபுரி, ஜூலை 28: குரூப்-2 தேர்வுக்கான மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆர். லில்லி கூறியது: 

ஆசிய நோபல் பரிசுகளை பெறும் இரு இந்தியர்கள்

ஆசியாவின் நோபல் பரிசுகள் என போற்றப்படுவது பிலிப்பைன்ஸின் ராமோன் மகசேசே விருதுகள். 2011 ற்கான ராமோன் மகசேசே விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 05 நபர்களில் இரு இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் இருப்பை மிஞ்சியது ஆப்பிள் நிறுவனம்

நியூயார்க்: அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

லிபிய புரட்சிப்படை தளபதி படுகொலை


லிபிய புரட்சி படையின் தளபதி அப்டெல் ஃபட்டாஹ் யூனெஸ் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தேசிய புரட்சிப்படை கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரேய்ன் சுரங்க விபத்து : 16 பேர் பலி

உக்ரேயினில் நேற்றிரவு இடம்பெற்ற சுரங்க் விபத்தில் 16 பேர் பலியாகினர். கிழக்கு லுகான்ஸ்க் மாநிலத்தில், இவ்வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
 இவ்விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.