Friday 29 July 2011

ஆசிய நோபல் பரிசுகளை பெறும் இரு இந்தியர்கள்

ஆசியாவின் நோபல் பரிசுகள் என போற்றப்படுவது பிலிப்பைன்ஸின் ராமோன் மகசேசே விருதுகள். 2011 ற்கான ராமோன் மகசேசே விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 05 நபர்களில் இரு இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.


பெங்களூரில் உள்ள செல்கோ இந்தியன் நிறுவனத்தின் உரிமையாளரான ஹரீஸ் ஹண்டே, கிராமப்புற மக்களுக்கு சூரிய சக்தியின் பயன்கள் கிடைக்க கடும் முயற்சி செய்து வருவர்.

மகாராஷ்டிராவில் கிராம மக்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக அயராது உழைப்பவர் நிலிமா மிஷ்ரா. இவ்விருவரது சமூக சேவைகளையும் பாராட்டி, 2011ம் ஆண்டின் ராமோன் மகசேசே விருதுகள் கிடைக்கப்பெறவிருக்கின்றன.

இவர்களை தவிர இந்தோனேசியாவில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைக்கும் ஹசனைன் ஜூவாய்னி, இந்தோனேசியாவில் மைக்ரோ நீர்மின் சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்திய திரி மும்புனி நிறுவன அதிகாரிகள், கம்போடியாவில் ஜனநாயகத்துக்கு போராடி வரும் கௌல் பானா, ஆகியோருக்கும் இவ்விருதுகள் கிடைக்கப்பெறவுள்ளன.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதி இவ்விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. 1957 ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் பலியாகிய முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் மகசேசேவின் பெயரில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment