Saturday 24 September 2011

கடாபியின் கட்டுப்பாட்டிலிருந்த ஷாபா நகரையும் கிளர்ச்சிப்படை கைப்பற்றியது!


கடும் யுத்தத்திற்கு பின்னர், கடாபியின் கட்டுப்பாட்டிலிருந்து ஷாபா நகரையும்
கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.

இதன் மூலம் நகருக்கு செல்லும்  பிரதான நெடுஞ்சாலை பாதை விடுவிக்கப்பட்டுள்ளது. ஷாபா கைப்பற்றப்பட்டதன் மூலம் லிபியாவின் தென்பகுதியும் கிளர்ச்சிப்படை வசம் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளை சாடிய ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் : அமெரிக்கா வெளிநடப்பு

ஐ.நா பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக- உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி

Vijayakanthசென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது தேமுதிக. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அது அறிவித்துள்ளது. கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.