கடும் யுத்தத்திற்கு பின்னர், கடாபியின் கட்டுப்பாட்டிலிருந்து ஷாபா நகரையும்
கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.
இதன் மூலம் நகருக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை பாதை விடுவிக்கப்பட்டுள்ளது. ஷாபா கைப்பற்றப்பட்டதன் மூலம் லிபியாவின் தென்பகுதியும் கிளர்ச்சிப்படை வசம் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நகருக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை பாதை விடுவிக்கப்பட்டுள்ளது. ஷாபா கைப்பற்றப்பட்டதன் மூலம் லிபியாவின் தென்பகுதியும் கிளர்ச்சிப்படை வசம் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடாபியின் மிக உறுதியான இறுதி கட்டுப்பாட்டு பிரதேசமாக ஷாபா நகர் விளங்கியது. அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்நகர் அமைந்திருப்பதால், இதனை கைப்பற்றுவதில் கிளர்ச்சிப்படை கடுமையாக போராடி வந்தது.
தற்போது சாபா நகர் கிளர்ச்சிப்படை வசம் வீழ்ந்துள்ள போதும், கடாபி மற்றும் முக்கிய இராணுவ தலைவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
திரிபொலி கடந்த மாதம் கைப்பற்றப்பட்டதிலிருந்து கடாபி தலைமறைவாகியிருந்தார்.
இதேவேளை பானி வாலித், கடாபி பிறந்த ஊரான சிர்த், மற்றும் திரிபொலியின் தென்பகுதி ஆகியன மாத்திரமே கடாபி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் இருக்கின்றன.
No comments:
Post a Comment