Saturday, 11 June 2011

பாசத்தை கொடுக்கும் பெற்றோர்கள் எய்ட்சை கொடுத்து சாதனை!

கொல்கத்தா : இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்தே அவர்களுக்கு பரவியுள்ளது என்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் மற்றும் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டியின் கருத்தரங்கு, மேற்குவங்காளம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

இதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள

தகவல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இந்தியாவுக்கான யுனிசெப் தலைவர் இவான் கேமரோனி நேற்று கூறியதாவது:

இந்தியாவில் பெரும்பாலும் பெற்றோராலேயே குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் ரத்தம் செலுத்தும் போது குறைந்த எண்ணிக்கையிலேயே எய்ட்ஸ் தொற்றுகிறது.

எய்ட்சால் பாதிக்கப்படும் பெண் மூலம் அவரது குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர் மூலம் ஆண்டுதோறும் 21 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கின்றனர். இதை தடுக்க தேவையான மருந்துகள், உதவிகளை யுனிசெப் செய்து வருகிறது.இவ்வாறு இவான் கூறினார்.

No comments:

Post a Comment