Saturday, 11 June 2011

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய போலீஸ்


ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய போலீஸ் அடாவடித்தனமாக கண்ணீர் புகை போன்றவற்றை பயன்படுத்தி விரட்டியடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கியதை தொடர்ந்து புனித இடத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களுடன் மோதல் ஏற்பட்டதாக இஸ்ரேலிய போலீஸின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

இச்சம்பவத்தில் அநியாயமாக 3 பலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேலிய போலீஸ் கைது செய்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மூத்த ஹமாஸ் தலைவர் வாஸ்பி கபா உள்ளிட்ட எட்டு பலஸ்தீனர்களை கடத்தி சென்றுள்ளதாக பலஸ்தீன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அரசில் கபா சிறைக்கைதிகள் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இஸ்ரேலிய சிறையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010 வரை அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குறைந்த பட்சம் 11 ஹமாஸ் அரசியலாளர்களை கைது செய்திருந்தது.

No comments:

Post a Comment