Saturday, 11 June 2011

கடாபி படைகள், மிஸுராட்டாவில் தாக்குதல் : 31 பொதுமக்கள் பலி .

லிபியாவின் மிஸுராட்டா நகரில் கடாபி இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பீரங்கிகள், ஆட்டிலெறி, ராக்கெட் எறிகணைகளை கொண்டு மிஸ்ரூட்டாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது கடாபி இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 61 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை தொடக்கம் கடாபி படைகள் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. நேற்று துனிசீய தலைநகரிலிருந்து 600 கி.மீ தொலைவிலும், அல்ஜீரிய எல்லைப்பகுதிக்கு அருகாமையிலும், உள்ள பகுதியில் கடாபி படையினர் திடீர் ஷெல் தாக்குத ல்நடத்தியுள்ளனர்.

இதில் கிளர்ச்சிக்குழுவை சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சில்டன் என அழைக்கப்படும் இப்பகுதி தற்சமயம் கடாபி இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இது புரட்சியாளர்கள் வசம் வீழுமாயின் மிஸுராட்டா நகரிற்குள் புரட்சிப்படை இலகுவாக புகுந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்குள்ள பெண்கள், கடாபி படைகளை எதிர்ப்பார்களாயின், அவர்களை கற்பழிக்குமாறு கடாபி உத்தரவிட்டிருப்பதாகவும், இதற்காக கடாபி படைகளுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிரது.

இதேவேளை அபுதாபிக்கு வந்தடைந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன், லிபிய மோதல்கள் தொடர்பில் கடாபியுடன் தொடர்ந்து பேசுவதற்கு முயற்சித்து வருவதாகவும், ஆனால் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment