Saturday 11 June 2011

ஊழல் பீதியினால் சொத்து விவரங்களை வெளியிட குஜராத் அமைச்சர்கள் தயக்கம்


ஊழல் குறித்த நாடுதழுவிய விழிப்புணர்வை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக காய்நகர்த்தி வரும் பாஜகவுக்கு ஆப்புவைக்க காங்கிரஸ் குஜராத் முதல்வர் ந்ரேந்திர மோடியின் அமைச்சர்களைக் குறிவைத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் ஜூன் மாத இறுதிக்குள் குஜராத் அமைச்சர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துக்கள், அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் பற்றி விவரங்களை தர வேண்டும் என மாநில முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் முதல்வரின் உத்தரவினை நிறைவேற்ற முடியாத நிலையில் அமைச்சர்கள் சிலர் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன என்றும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் 1000 பக்க அறிக்கையினை எதிர்க்கட்சியான காங்கிரசார், குடியரசுத் தலைவரிடம் புகார் மனுவாக அளித்திருந்ததைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடி, தனது அமைச்சர்கள் சொத்துக்கள் பற்றி விவரங்களை தர வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

மோடியின் உத்தரவால் அமைச்சர்கள் பெரும் சிக்கலிலும்,பீதியிலும் உள்ளனர்.உண்மையான சொத்து விபரத்தை தெரிவித்தால் பின்னாளில் பல்வேறு கேள்விகளுக்கும், சிக்கல்களுக்கும் ஆளாக நேரிடும் என அஞ்சுவதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தகவல்அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஹரினீஸ் பாண்டே கூறுகையில்,குஜராத் அமைச்சர்கள் உத்தமர்களாக இருந்தால் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டியதுதானே, மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் ஏன் தயங்குகின்றனர்? என கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment