Saturday 11 June 2011

இந்தியாவில் அடக்கஸ்தலம்:ஹுஸைன் குடும்பம் நிராகரிப்பு


புதுடெல்லி:எம்.எஃப் ஹுஸைனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரலாம் என மத்திய அரசு அளித்த வாக்குறுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசித்துவந்த எம்.எஃப்.ஹுஸைனுக்கு கையாலாகாத மத்திய அரசு அவரது பாதுகாப்பிற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கேவலமாக விமர்சித்து புத்தகம் எழுதிய பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரினுக்கு புகலிடம் அளித்தது.


இந்நிலையில் லண்டனில் மரணித்த எம்.எஃப்.ஹுஸைனுக்கு இந்தியாவில் அடக்கம் செய்தற்கு இடம் தரலாம் என மத்திய அரசு அளித்த வாக்குறுதியை அவரது மகன் நிராகரித்துவிட்டார். காலம் கடந்தாலும் இந்தியாவின் விருப்பத்தை ஹுஸைனின் பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என மத்திய அரசு கருதியது. இதனை தொடர்ந்து இந்தியாவில் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளும் என அறிவித்தது.

இத்தனை ஆண்டுகளாக சொந்த நாட்டிற்கு திரும்பி வரவேண்டும் ஆவல் கொண்டபிறகும் தனது தந்தைக்கு எவ்வித உதவியும் அளிக்காத அரசு அவர் மரணித்த பிறகு இறந்த உடலை மட்டும் கொண்டுவர கோருவது அவமதிக்கும் செயல் என கூறிய அவரது மகன் இந்தியாவின் வாக்குறுதியை நிராகரித்துவிட்டார்.

லண்டனில் ஹுஸைனின் உடலுக்கு இந்திய ஹைக்கமிஷனர் நளின் சூரி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொழிலதிபர்கள் லட்சுமி மிட்டல், கோபி ஹிந்துஜா ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். தெற்கு லண்டனில் உள்ள ஸர்ரேயில் ப்ரூக்வுட் முஸ்லிம் கப்றுஸ்தானில் ஹுஸைனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment