கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் தற்போது கடுமையாக அதிகரித்து வருகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரபல ஜேர்மனி பருவ நிலை விஞ்ஞானி இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கட்டுரை அமெரிக்க இதழான நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் புத்தகத்தில் வெளியாகி உள்ளது.
உலகில் தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர் ஆண்டுக்கு 0.6 மில்லி மீற்றர் அளவுக்கு கடல் நீர் அதிகரிப்பு ஏற்பட்டடு 400 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 1800ஆம் ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டதை தொடர்ந்து கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு 2 மில்லி மீற்றர் அளவு அதிகரித்தது.
2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவு நீர் மட்ட அதிகரிப்பு காணப்பட்டது. கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடலோரம் அருகே நகரங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment