Wednesday 22 June 2011

துருக்கி - இஸ்லாமிய அரசியலை நோக்கி

தேர்தல் அரசியலில் பங்கேற்று இஸ்லாமிய அரசியலை நோக்கிய பயணத்திற்கான ஒரு நிகழ்கால உதாரணத்தைத் தருகிறேன்.


துருக்கி! நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் இஸ்லாமிய உலகின் தலைநகராக இருந்த நாடு. பின்னர் முஸ்தபா கமால் பாட்சா என்பவன் தலைமையில் அந்நாடு வந்தபின், இஸ்லாமிய அடையாளம் முழுமையாக அகற்றப்பட்டு, யூரோப்பிய நாகரீகத்தின்


அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வந்த நாடு.

துருக்கியைப் பொறுத்தவரை, அந்நாட்டுப் பிரதமரைவிட இராணுவம்தான் பலம் வாய்ந்தது. அந்நாட்டு அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சோசலிசத்திற்கு சற்றே மாற்றமாக நடந்து கொண்டாலும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் பல உண்டு.

துருக்கியின் மிகப்பெரும் நகரான இஸ்தான்பூலின் மேயராக இருந்து தற்போது அந்நாட்டுப் பிரதமராக இருப்பவர் தய்யிப் எர்தோகான். இஸ்லாமிய சிந்தனையுள்ள இவரின் AKP கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் – உடடினயாக வட்டியைத் தடை செய்யவில்லை. அது இயலாது. ஆனால் வட்டியைப் பெருமளவில் குறைத்தார். பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து, உலகிலேயே மிகவும் மதிப்பற்ற கரன்சியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த

லிரா இன்று கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் மற்றும் யூரோவுக்கு இணையாக உள்ளது. சில வேளைகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக துருக்கி லிராவின் மதிப்பு உயர்ந்தும் உள்ளது. தற்போது துருக்கியின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்… துருக்கி

மக்களின் தனிநபர் வருமானமும் வளர்ச்சிப் பாதையில்….

எர்தோகான் தலைமையிலான அரசு அமைந்த பின், துருக்கி வட்டார ரீதியில் மதிப்பு பெறத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்த துருக்கி, எர்தேகான் ஆட்சிக்கு வந்தபின், பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுக்கவும், இஸ்ரேலைக் கண்டிக்கவும் தவறுவதில்லை. பாலஸ்தீனர்களுக்கு உதவிப் பொருள்கள் அடங்கிய கப்பலை அனுப்பி வைத்ததையும் நாம் அறிவோம்.

இஸ்லாமிய சட்டங்களை நேரடியாக அமல்படுத்த தற்போதைய துருக்கியின் அரசியல் சாசனம் இடம் அளிக்கவில்லை. இராணுவத்தின் பிடியிலிருந்து துருக்கியின் அரசியலை தூரமாக்க

வேண்டும். இதற்கு அரசியல் சாசனத்தையே மாற்றி அமைக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி தேவை.

இன்ஷா அல்லாஹ் அடுத்த ஞாயிற்றுக் கிழமை துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எர்தோகான், “அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு எங்கள் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி தாருங்கள்” என்று பொதுமக்களிடம் நேரடியாகக் கோரியே வாக்கு சேகரிப்பில் உள்ளார். அல்லாஹ் அவருக்கும் அவருடைய கட்சிக்கும் வெற்றியைத் தரட்டும் என்று பிரார்த்திப்போம்.

எகிப்தில் புரட்சி நடைபெற்று ஹோஸ்னி முபாரக் அதிபர் பதவியில் இருந்து துரத்தப்பட்ட போது, உலக நாடுகளும் ஊடகங்களும் இக்வான்கள் கையில் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பு சென்றால் தாலிபான், ஆப்கானிஸ்தான், அல்காயிதா என்று தங்கள் கற்பனைகளை அள்ளித் தெளித்த வேளையில், ஊடகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகள் அச்சப்பட வேண்டியதில்லை. நாங்கள் துருக்கியில் ஆட்சியில் இருக்கவில்லையா என்று

ஊடகங்களுக்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் தந்தமை குறிப்பிடத் தக்கது.

துருக்கி – இஸ்லாமிய அரசியலை நோக்கிய பயணத்தின் நிகழ்கால உதாரணம்.

No comments:

Post a Comment