கடந்த மே மாதம் தாலிபான்
இயக்க தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால்
தற்போது, அந்த செய்தி தவறானது என்று தாலிபான் இயக்கத்தினர் மறுக்கின்றனர்.
அந்த
இயக்கத்தை சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் என்பவர் கூறும்போது, அமெரிக்க
நேட்டோ படையினர் ஃபோன் ஹேக்கிங் முறையில் எனது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி
அதில் முல்லா ஓமர் கொல்லப்பட்டதாக ஊடகங்களுக்கு நான் செய்தி தெரிவித்தது
போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள்
எங்களை வெற்றி கொள்ள இயலவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த செயலுக்கு
மொபைல் நெட்வொர்க் சேவை அளிப்போரும் துணைபோயுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment