பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி இயக்கமும், எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் பலஸ்தீன், கஷ்மீர் உட்பட முஸ்லிம் உம்மா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கூட்டாக தீர்வுகானவும், அந்த பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் விழிபுணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளது.
இரு அமைப்புக்களினதும் முக்கிய தலைவர்களின்
சந்திப்பு இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கெய்ரோ தலைமையகத்தில்
அண்மையில் நடைபெற்றது. அங்கு இரு அமைப்புக்களினதும் உறவை மேம்படுத்துவது
என்று தீர்மானிக்கப்பட்டது.
மூன்று பேரை கொண்ட பாகிஸ்தான் தூதுக்குலுவின்
நான்கு நாள் பயணத்தில் பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் முன்னவர்
ஹசன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இஸ்லாமிய
நாட்டின் மிகப் பிரதான இஸ்லாமிய இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமீன்
இயக்கத்தின் தலைவர் முஹம்மது பேடாய் அவர்களின் அழைப்பின் பேரிலேயே இவர்கள்
கெய்ரோ சென்றார்கள் என்பது குறிபிடத்தக்கது.
இரு தரப்பு பேச்சுவர்தகளின் போது ஜமாஅதே
இஸ்லாமின் தலைவர் முனவ்வர் ஹசன் செயலளர் லியாகத் பலோச் வெளிவிவகாரத்துறை
மேலாளர் அப்துல் கப்பார் அஸீஸ் ஆகியோரும், இஹ்வானுல் முஸ்லிமீன்
இயக்கத்தின் தலைவர் முஹம்மது பேடாய், செயலாளர் டாக்டர் மஹ்மூதுல் ஹசன்
மற்றும் இஹ்வான் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கஷ்மீரிலும் ,
பலஸ்தீனிலும் நடைபெறும் மிக பிந்திய நிலவரம் ஆராயப்பட்டது. அடக்கி
ஒடுக்கபட்டுள்ள மக்களின் அவலம் பற்றி உலகின் கவனத்தை ஈர்க்க முயல்வதுடன்
அம்மக்களுக்கு நீதியானதொரு தீர்வு கிடைக்க செயலாற்றுவது பற்றியும்
ஆலோசிக்கப்பட்டது.
இஸ்லாத்தின் கண்ணியத்தை மேன்படுத்தவும்,
அதன் தூய தூதை உலகெங்கும் பரவ செய்வதற்கும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய
அமைப்புகளுடன் மிக வேகமாக ஒன்றினைக்கச் செய்ய முயற்சிகள்
மேற்கொள்ளப்படுவதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது.
No comments:
Post a Comment