Monday 25 July 2011

உ.பி : சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி: முலாயம் முடிவு

உ.பி.சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முலாயம் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகிற 2012 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.


மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில்,தேர்தல் களத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய 3 பெரிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் வரவிருக்கும் தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்பொழுது, பா.ஜனதா ஆட்சியின் போது மாநிலத்தில் வன்முறைகள் சற்று குறைந்து இருந்தது என முலாயம் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.
அவரது இந்த கருத்து சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பதற்கான விருப்பம் என்றும்,அதன் காரணமாகவே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாகவும் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து முலாயம் சிங் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment