Monday, 25 July 2011

சீனாவின் முதல் புல்லட் ரயில் விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் நின்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் மீது, மற்றோரு புல்லட் ரயில் மோதியதில் 35 பேர் பலியாகினர். மேலும் 191 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் ஹாங்ஹூ நகரில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள பியூஷுவுக்கு நகருக்கு D3115 என்ற புல்லட் ரயில் நேற்று புறப்பட்டது. வென்ஷியு நகர் அருகே வந்த போது மின்னல் தாக்கியதால் மேற்கொண்டு இயங்க மின்சாரம் இல்லாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.

அப்போது பெய்ஜிங்கில் இருந்து பியூஷுவுக்கு சென்ற D301 என்ற மற்றொரு புல்லட் ரெயில், நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது பலத்த சத்தத்தோடு மோதியது. இதில் 2 ரயில்களின் சில பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது.

இரவு 8.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகினர். மேலும் 191 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 ரெயில்களிலும் 1400 பேர் பயணம் செய்தனர். அவர்களில் காயம் இன்றி உயிர் தப்பியவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.கடந்த 2008ம் ஆண்டு இரு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 72 பேர் பலியாகி,

400 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment