Monday 25 July 2011

சவுதி அரோபியாவில் சிக்கி தவிக்கும் 25 தமிழர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ராஜீவ்காந்தி, வீரப்பன், சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கணேஷ் ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். 

 

அந்த       மனுவில்,   ‘’வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனத்தை கள்ளக்குறிச்சியில் நடத்தி வரும் செங்கோல்,

சவுதி அரேபியாவில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. ரூ.15 ஆயிரம் சம்பளம் மட்டுமின்றி சாப்பாடும், தங்குமிடமும் இலவசம் என ஆசைவார்த்தைகள் கூறினார்.

அதனை நம்பி தலா ரூ.1 லட்சத்தை கடந்த 2010-ம் ஆண்டில் அவரிடம் கொடுத்து சவுதி அரேபியா சென்றோம். ஆனால் அங்கு அவர் கூறியபடி எங்களுக்கு சம்பளம் தரப்படாமல் சித்ரவதைக்கு  ஆளாக்கப்பட்டோம். இது பற்றி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிறகு சில இஸ்லாமிய அமைப்புகள் உதவியுடன் தமிழகம் வந்து சேர்ந்தோம். எங்களைப்போல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, சரவணன் மற்றும் ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலைக்கு சென்று ரியாத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த செங்கோலை பிடித்து விசாரணை நடத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

1 comment: