இஸ்லாமாபாத் : அமெரிக்க
செயலர் ஹில்லாரி கிளிங்டன் இந்தியாவை ஆப்கானிஸ்தான் மற்றும்
ஆசியா-பசிபிக்கிற்கு காவலாளியாக நியமித்துள்ளது என்று கூறியுள்ளதாக
பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை வந்திருந்த ஹில்லாரியின் கூற்றுப்படி
அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவு
செய்துள்ள அதேவேளையில் இந்தியாவை அமெரிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் முழு
ஆசியா-பசிபிக்கிற்கும் காவலாளியாக ஆக்கியிருப்பதாகவும் உர்து ஜங் என்ற
தினப் பத்திரிக்கையில் ஆசிரியர் பகுதியில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது.
எனவேதான் இந்தியாவை உலகில் மிகப்பெரிய
அணுசக்தி நாடாக ஆக்க அமெரிக்க உதவி வருவதாகவும் மேலும் பொருளாதாரம் மற்றும்
தொழிநுட்பம் ஆகியவையில் இந்தியாவிற்கு உதவுதாக வாக்குறுதி அளித்துள்ளது
எனவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் சீன வளர்ச்சியை தடுப்பதற்காகவும்
சீனாவிற்கு எதிரான போட்டியாகவும் இந்தியாவை ஆக்க அமெரிக்க முயலுவதாகவும்
தெரிவித்துள்ளது. மேலும் சீன ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்தியாக
ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்திய வளர்ச்சிக்கு அமெரிக்க
உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று சென்னை வந்திருந்த
ஹில்லாரி கூறியதாவது இந்தியா மற்றவர்களை வழிநடத்த இதுவே சரியான தருணம்
என்று கூறினார்.
மேலும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறுகள் பல ஆசியாவில் எழுத
இருப்பதால் இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உடனான நல்லுறவில் அமெரிக்காவின்
பங்கு இருக்க வேண்டும் எனக் கூறினார் என செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment