யூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக்கேட்டல்
விவகாரத்தில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவியார் கேட் மிடில்டன்
மற்றும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள்
வெளியாகியுள்ளன.
முன்னதாக புலனாய்வாளர் கிளெண் மியூகிலேர் மற்றும் நியுஸ் ஆஃப் தி
வேர்ல்ட் முன்னாள் அரச குடும்ப விவகாரங்களுக்கான செய்தியாளர் கிளிவ்
கூட்மேன் ஆகியோரால் இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் ஹரி உட்பட பலரது
தொலைபேசி உரையாடல்கள், ஒட்டுகேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மிடில்டனுடைய தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பொஸிசார் அவர்களிடம் விசாரணைக்கு அணுகியுள்ளது தெரியவந்துள்ளது.
இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர் கேய் பெல்லி என்பவர் நியூஸ் ஆஃப்தி வேல்ட் நிர்வாகத்தினர் தனது தொலைபெசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கொடுத்த முறைப்பாடை தொடர்ந்து இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
அரச குடும்பத்தினர் உட்பட பல்வேறு நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்துக்கு ஆளான நியூஸ் ஆஃதி வேல்ட் பத்திரிகை அண்மையில் தனது சேவையை முழுவதுமாக நிறுத்தியதுடன், அப்பத்திரிகையின் தலைமை இயக்குனர் முர்டோச், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசாரணை கூட்டம் ஒன்றின் போது, இவ்விவகாரத்தால் பாதிக்கப்பட்டட நபர் ஒருவரால் தாக்குதலுக்கும் உள்ளாகினார்.

No comments:
Post a Comment