பாட்னா:
டெல்லியிலிருந்து கவுஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ்
விமானம் எதிரே வந்துக்கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதவிருந்த
விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.
ஜெட்
ஏர்வேஸ் விமானமும் மற்றொரு சர்வதேச விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து
கொண்டிருந்தபோது திடீரென அவை நேருக்கு நேர் வந்து மோத இருந்த வேளையில் இரு
விமானிகளும் திறமையாக செயல் பட்டதால் அந்த விபத்திலிருந்து இரு
விமானங்களும் தப்பின.
நேற்று
காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து
கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து
கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே இறங்கியது.
இதனால் பயணிகள் அலறிப்போனார்கள்.
இதையடுத்து
விமான ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து பேசிய விமானி தமது பாதையில் மிக
அருகே ஒரு போயிங்- 747 சர்வதேச விமானம் அதேபாதையில் எதிரே வந்ததால்,
விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு
நிலையத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் உடனடியாக விமானத்தை 1000அடி கீழே
இறக்கியதாக கூறினார். இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
No comments:
Post a Comment